Jeeva-digital-64

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்!

மகாசேனா (தமிழ்):

இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள ‘மகாசேனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

படையப்பா (ரீ-ரிலீஸ்):

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

நாங்கள் (ரீ ரிலீஸ்):

இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் ‘நாங்கள்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது அத்திரைப்படத்தை இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

படையப்பா ரீ ரிலீஸ்
படையப்பா ரீ ரிலீஸ்

மோக்லி (தெலுங்கு):

இயக்குநர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரோஷன் கனகலா நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அகண்டா 2: தாண்டவம் (தெலுங்கு):

இயக்குநர் போயபாட்டி ஸ்ரீனு இயக்கத்தில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் இத்திரைப்படம் பான் இந்தியா படமாக திரையரங்குகளில் இன்று (டிசம்பர் 12) வெளியாகியுள்ளது. இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பிணிசெட்டி மற்றும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஓடிடி தொடர்கள்:

  • சிங்கிள் பாப்பா – நெட்பிளிக்ஸ் – இந்தி

  • 3 ரோஸஸ் (சீசன் 2) – ஆஹா – தெலுங்கு

F1
F1

ஓடிடி திரைப்படங்கள்:

  • காந்தா – நெட்பிளிக்ஸ் – தமிழ்

  • ஆரோமலே – ஜியோ சினிமா / ஹாட்ஸ்டார் – தமிழ்

  • F1 – ஆப்பிள் டிவி – ஆங்கிலம்

  • வேக் அப் டெட் மேன்: எ நைவ்ஸ் அவுட் மிஸ்டரி – நெட்பிளிக்ஸ் – ஆங்கிலம்

  • சூப்பர்மேன் – ஜியோ சினிமா / ஹாட்ஸ்டார் – ஆங்கிலம்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest