
இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், கடந்த 2020 டிசம்பரில், நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் திருணம் செய்துகொண்டார்.
இருப்பினும், கடந்த பிப்ரவரியில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சஹால் – தனஸ்ரீ, நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் பிரிந்தனர்.
இவ்வாறான சூழலில், சமீபத்திய பேட்டியொன்றில், விவாகரத்தான சமயத்தில் பலரும் தன்னைத் தவறாகப் பேசியதாகவும், சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று யோசித்ததாகவும் மிகவும் எமோஷனலாக சஹால் பேசியிருந்தார்.

இந்த நிலையில், அதே பேட்டியில் மேலும் பல விஷயங்களை சஹால் பகிர்ந்திருக்கிறார்.
தங்கள் இருவருக்குள் பிரிவு எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்பதை விவரித்த சஹால், “ரொம்ப நாளாகவே அவரை நான் பார்க்கவில்லை. பின்னர் வீடியோ காலில் அவரைப் பார்த்தேன்.
அதில் எங்களுடன் வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதன்பிறகு எங்கள் இருவருக்கிடையில் மெசேஜ் உட்பட எதுவுமே இல்லை.
விவாகரத்துக்கு முன்னாள் ஆறேழு மாதங்கள் நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை.
எப்போதாவது முக்கியமான விஷயமென்றால் மட்டும்தான் பேசுவோம். அதைத் தவிர வேறெதுவும் இல்லை.
டி20 உலகக் கோப்பைக்கு (2024) பிறகு அப்படித்தான் சென்றது” என்று கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, விவாகரத்து பேச்சுக்களை யார் தொடங்கியது என்ற கேள்விக்கு, “சில நேரத்தில் அவர், சில நேரத்தில் நான். பிறகு அது ஒரு நாள் பரஸ்பரம் நடந்தது” என்று சஹால் கூறினார்.
அப்போது, அதைச் சரிசெய்ய ஏதாவது வாய்ப்பு இருந்ததா என்று கேட்டபோது, “அப்படியெதுவும் இல்லை. போதுமான அளவுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். என்னால் முடிந்ததை நானும் முயன்றேன்” என்று சஹால் வெளிப்படையாகப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…