
இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளுக்கான செலவுகள் அதிகப்படியாக உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி எல்லா பொருள்களின் விலைகளும் அதிகமாகி வருகிறது. ஒரு குடும்பத்தை நடத்துவது என்றாலே அதற்கான செலவுகள் சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது.
இப்படி இருக்கும் சூழலில் ஒரு தம்பதி தனித்துவமான வாழ்க்கை முறையை தொடங்கி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. ”செலவில்லா வாழ்க்கை” என்று விவரிக்கப்படும் அவர்களின் வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காவ்யா மற்றும் சங்கீத் என்ற அந்த தம்பதியினர் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தங்களது செலவில்லா வாழ்க்கை முறை குறித்த விவரித்துள்ளனர். இந்த வாழ்க்கை முறை பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அவர்கள் வீட்டிலேயே தங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் அவர்களின் சேமிப்பு பணத்தை முதலில் முதலீடு செய்துள்ளனர். அதற்கு பின்னர் தற்போது அவர்கள் அந்த வீட்டில் செலவில்லா வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அதாவது தங்களுக்கான காய்கறிகளை வளர்ப்பது, குளத்தில் மீன்கள் வளர்ப்பது, அரிசி உற்பத்தி செய்வது, தினசரி தேவையான புரதத்தை அவர்களின் கோழிகள் மற்றும் பசுக்களிடம் இருந்து பெறுவது என ஆரம்பத்தில் முதலீடு செய்து தற்போது செலவில்லாத ஒரு வாழ்க்கை முறையை இந்த தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர் என்கிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் ”நாங்கள் ஆரம்பத்தில் எங்களது சேமிப்பின் 60% பணத்தை இந்த கனவு வீடு கட்டுவதற்காக முதலீடு செய்தோம். அப்போது எங்களை பலரும் முட்டாளாக நினைத்தனர். தற்போது எங்களது கனவை இல்லத்தில் ஒரு செலவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம்.
இது 100% நிலையானது என்று சொல்ல முடியாது!
எங்களது வீடு ஒரு வாழ்விடம் மட்டுமல்லாமல் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பாக உள்ளது. காய்கறி தொடங்கி மீன்கள் அரிசி, பால், முட்டை அனைத்தும் நாங்கள் இலவசமாகவே பெறுகின்றோம். சூரிய ஒளி மின்சார பேனல்கள் மூலம் வீடு மற்றும் நீர் பாசனத்துக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிறோம். இது தவிர ஒரு அறை முழுவதும் காளான் வளர்ப்புக்காக ஒதுக்கி உள்ளோம். தேனீகள் வளர்ப்பு மூலம் தேன் பெறுகிறோ.
இப்படி உற்பத்தி செய்யப்படும் மீத பொருட்களை விற்று எங்களது கனவு இல்லத்திற்கு மேலும் சேகரித்து வருகிறோம்.” என்று தங்களது வாழ்க்கை முறை குறித்து வீடியோவாக பகிர்ந்து இருக்கின்றன.
இந்த வீடியோவின் கேப்ஷனில் பணத்தை விட மன அழுத்தமும் எரிச்சல் இல்லாத ஒரு வீட்டில் தினமும் எழுந்திருப்பது முக்கியம். உங்கள் அன்புக்குரியவர்களிடம் சிறிய கனவுகளை பற்றி பேசி மகிழும் தருணங்கள் உங்களுக்கு இருக்கும். எங்கள் உணவை நாங்களே வளர்த்து இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வருகிறோம். இது 100% நிலையானது என்று சொல்ல முடியாது. ஆனால் இவ்வாறு முயற்சி செய்வதே எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணைவாசிகளிடம் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது