honour-x-9c

ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் பிரைம் விற்பனை நாளான ஜூலை 12 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஹானர் எக்ஸ் 9சி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேசான் சலுகை விற்பனையில் சந்தைக்கு அறிமுகமாகிறது. இதனால், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டானியம் கருமை, இளம் பச்சை ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும் ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21,999. இது 8GB உள்நினைவகம் மற்றும் 256GB நினைவகம் கொண்டது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போனில், டிராப் டெக்னாலஜி 2.0 என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உறுதித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் தூரத்தில் இருந்து விழுந்தாலும் உடைவதற்கான வாய்ப்பு 166% குறைவு என உறுதியளித்துள்ளது.

  • தட்டையான டைட்டானியம் உலோகத்தாலான புறவடிவமைப்பு உடையது

  • 6600 mAh பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 39% பேட்டரி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • 28.8 மணி நேரம் தொடர்ந்து விடியோக்களை பார்க்கலாம். 48.4 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை கேட்கலாம்.

  • திரையின் வெளிச்சம் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் ஐ கம்ஃபோர்ட் டிஸ்பிளே அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4000nits அம்சம் கொண்டது.

  • 108MP ஐஓஎஸ் மோஷன் சென்சார் பொருத்தப்பட்ட கேமராக்கள் உடையது. இதனால், விடியோக்களை எந்தவித தடுமாற்றமுமின்றி பதிவு செய்ய முடியும்.

  • 360 டிகிரியிலும் நீர்புகாத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

  • மேல் – கீழ்புறம் என இரண்டு ஸ்பீக்கர்கள் உடையது.

இதையும் படிக்க | விவோ ஃபோல்டு மொபைல் ஜூலை 14-ல் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest