Iphone-17-series-edd

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன் நேற்று (செப். 9) மின்னணு சந்தைகளுக்கு அறிமுகமானது.

ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ் இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இதன் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று (செப். 9) இரவு 10.30 மணி முதல் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் இந்நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. மேலும், ஆப்பிள் டிவி வைத்துள்ளவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களை செப். 12ஆம் தேதி மாலை 5.30 மணி (இந்திய நேரம்) முதல் முன்பதிவு செய்யலாம். செப். 19ஆம் தேதி முதல் விநியோகம் தொடங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

  • ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனில் வேறு எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில், மிகக்குறைந்த தடிமனில் (5.6 மி.மீ) தயாரிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எட்ஜ் எஸ் 25 ஸ்மார்ட்போனை விட (5.8 மி.மீ.) இது குறைவாகும்

  • 6.5 அங்குல ஓஎல்இடி திரை கொடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் திறனுடைய தொடுதிரையாக அமைக்கப்பட்டுள்ளது.

  • பின் புறம் 48MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு அதிகமாக ஜூம் செய்து கொள்ளலாம். செல்ஃபி பிரியர்களைக் கவரும் வகையில் முன்பக்கம் 18MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • A19 சிப்செட் மற்றும் சேம்பர் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

  • நீலம், கருப்பு, ஆரஞ்ச், சில்வர் ஆகிய 4 நிறங்களில் கிடைக்கும்

  • 256GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 82,900; 512GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் ரூ. 1,02,900

  • ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 மணிநேரத்துக்கு தொடர்ந்து விடியோக்களை பார்க்கலாம் என ஆப்பிள் கூறுகிறது.

இதையும் படிக்க | நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

iPhone 17 launched in India: Specs, prices and availability revealed

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest