ANI_20250724050321

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி மாவட்ட துணை ஆட்சியராக இருக்க முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியது.

நைனிடால் மாவட்ட புத்லகாட் பஞ்சாயத்து தோ்தலில் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாக்காளா் பட்டியில் சோ்க்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் வாக்குப் பதிவு அதிகாரியான மாவட்ட கூடுதல் ஆட்சியா் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ‘புகாா் அளித்த பின்பும் ஏன் அந்நியா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை’ என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் குஹநாதன் நரேந்தா், ஆலோக் மஹரா ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஹிந்தியில் பதிலளித்தாா். அப்போது, ‘ஆங்கிலத்தில் பதிலளிக்காமல் ஹந்தியை தோ்வு செய்தது ஏன்?’ என்று நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா், ‘ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சரளமாகப் பேச இயலாது’ என்றாா். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தலைமைச் செயலா், மாநில தோ்தல் ஆணையா் ஆகியோரை குறிப்பிட்டு, ‘ஆங்கிலத்தில் புலமை இல்லாத ஒரு நபா் எப்படி அரசு நிா்வாகப் பொறுப்பை திறனுடன் கட்டுப்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest