
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்துரையாடினார்.
தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது நாட்டின் வலிமையை எதிரிக்கு காட்டியுள்ளோம். இந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படை, தீவிரமாகப் பணியாற்றி தனது வலிமையை நிரூபித்துள்ளது.
நமது படையின் ஒருங்கிணைப்பும் வீரமும் சேர்ந்து, வெற்றி என்பது நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே நமது வழக்கம் என்பதைக் காட்டியுள்ளது. இதனையே நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பஹல்காம் தாக்குதல் நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த முறை, பயங்கரவாதிகள் கனவிலும் நினைக்காத பாடத்தை புகட்ட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! – ராகுல் காந்தி