
மலையாள சினிமா நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுகுறித்து மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததை அடுத்து எர்ணாகுளம் சி.ஜே.எம் கோர்ட்டில் இதுகுறித்து மனு அளித்திருந்தார்.
இதற்கிடையே ஸ்வேதா மேனன் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த சினிமாக்களின் சில ஆபாச காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகியின. இந்த நிலையில் ஸ்வேதா மேனோன் மீது வழக்குப்பதிவு செய்ய எர்ணாகுளம் சி.ஜே.எம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கொச்சி சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஐ.டி ஆக்ட் படியும், ஒழுக்ககேடான நடைமுறைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடும் நிலையில், வரும் 15-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அவருக்கு எதிராக நடிகர் தேவன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து நடிகை ஸ்வேதா மேனன் ஐகோர்ட்டை நாடினார். கேரளா ஐகோர்ட்டில் நடிகை ஸ்வேதா மேனன் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:
மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் தேர்தலில் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவதால் தான் தனக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமா நடிகர் சங்க சரித்திரத்தில் முதல் முதலாக பெண் தலைவர் ஆகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தே, என்னை அவமானப்படுத்தும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட செயல் முறையை தவறாக பயன்படுத்துவதற்காக இந்த வழக்கை போட்டுள்ளனர்.
புகார் மனுதாரரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை மற்றும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். நான் நடித்த சினிமாக்கள் எல்லாம் சென்சார் போர்டு அங்கீகரித்தவை. எனவே இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.
என ஸ்வேதா மேனன் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், ஸ்வேதா மேனன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மேகும், இந்த வழக்கு குறித்து புகார்தாரரிடமும், போலீஸாரிடமும் விளக்கம் கேட்டது ஐகோர்ட். மேலும், எர்ணாகுளம் சி.ஜே.எம் நீதிமன்றத்திடம் ஐகோர்ட் அறிக்கை கேட்டுள்ளது. இதற்கிடையே மலையாள சினிமா பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நடிகை ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.