
புதுதில்லி: தீபாவளிக்குள் ஜிஎஸ்டி-யில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான திட்டங்களால், ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. இதனை தொடர்ந்து நுகர்வோர் சாதனங்களின் பங்குகளும் உயர்ந்து முடிவடைந்தன.
ஆம்பர் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் பங்குகள் 7.93 சதவிகிதமும், ப்ளூ ஸ்டார் 7.35 சதவிகிதமும், வோல்டாஸ் 5.78 சதவிகிதமும், ஹேவல்ஸ் இந்தியாவின் பங்குகள் 5.12 சதவிகிதமும், வேர்ல்பூல் ஆஃப் இந்தியா 4.74 சதவிகிதம் மற்றும் சிம்பொனி 3.69 சதவிகிதம் வரை பிஎஸ்இ-யில் உயர்ந்தன.
பிஎஸ்இ நுகர்வோர் சாதனங்களின் குறியீடு 3.08 சதவிகிதம் உயர்ந்து 60,879.51 ஆக உள்ளது.
வரி குறைப்பானது நுகர்வை அதிகரிக்கவும், சாதனங்களுக்கான தேவையை மேலும் அதிகரிக்கவும் இது கணிசமாக உதவும் என்றது கோத்ரேஜ் அப்ளையன்ஸ் நிறுவனம்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!