
வாஷிங்டன்: அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம். இதன்படி 16 நாட்களில் எங்களது ஆய்வகத்தில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்கிறது.