
புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இதனை மேற்கோள்காட்டியே, ராகுல் காந்தி இந்த பதிவை இட்டுள்ளார்.
இந்தியர்களின் நலனுக்காக, வெளிநாடுகளில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேசுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார் என்றும் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.
அதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு, ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவுக்கு மிகவும் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவையும், தற்போது அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தியதன் செய்தியையும் இணைத்து, ராகுல் காந்தி இன்று மீண்டும் ஒரு எக்ஸ் பதிவை மேற்கொண்டுள்ளார். அதில்தான், நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டிருக்கிறார்.
எச்-1பி விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் உயர்த்தி இன்று அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்காவின் எச்-1பி விசா பெற ரூ.90 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள் பெற்றிருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு, இந்திய தகவல்தொழில்நுட்ப ஊழியர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
I repeat, India has a weak PM. https://t.co/N0EuIxQ1XG pic.twitter.com/AEu6QzPfYH
— Rahul Gandhi (@RahulGandhi) September 20, 2025
அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு குறித்த செய்திய தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் ராகுல் காந்தி, நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கும் கருத்தில், உங்களுக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்து அழைப்புக்கு அளிக்கப்பட்ட பரஸ்பர பரிசினால் இந்தியர்கள் கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள். நமது பக்கம் டிரம்ப் அரசு என்று பிரதமர் மோடியால் கூறப்பட்ட டொனால்ட் டிரம்ப் அளித்த பரிசு இது என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
I repeat, Congress MP Rahul Gandhi has posted on his X page that India has a weak Prime Minister.
இதையும் படிக்க… வானில் பிரகாசமாக எழுந்த பிழம்பு! தில்லி-என்சிஆர் பகுதி மக்கள் ஆச்சரியம்!