E0AE87E0AEB8E0AF8DE0AEB0E0AF87E0AEB2E0AF8D-E0AEAAE0AEBEE0AEB2E0AEB8E0AF8DE0AEA4E0AF80E0AEA9E0AF8D

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவிய  குழு ஒன்று , காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை (genocide) நிகழ்த்துவதாக கூறி உள்ளது

இதில், காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இஸ்ரேல் அதிகார அமைப்புக்கு இருப்பாதாக அந்த குழு கூறி இருக்கிறது. 

2021-ல் மனித உரிமைகள் கவுன்சில் அமைத்த, காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் குறித்த சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் (Independent International Commission of Inquiry) அறிக்கையில், காசாவில் இனப்படுகொலை நேரடியாக நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

இஸ்ரேல் அதிகார வர்க்கம் காசாவில் திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

“மரணத்திற்கு வழிவகுக்கும் எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட முயற்சிக்கப்பட்டது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க ஹமாசின் செயல் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது” என்று கூறி உள்ளது.

சரி இனப்படுகொலை (genocide) என்றால் என்ன? எப்படி இனப்படுகொலை வரையறுக்கப்படுகிறது?  

காசாவில் இருந்து வெளியேறும் மக்கள்
காசாவில் இருந்து வெளியேறும் மக்கள்

இனப்படுகொலை வரையறையும் சர்ச்சைகளும்

இனப்படுகொலை என்பது மனித குலத்தின் மீது நடக்கும் மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.

இதன் பொருள், குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை கொத்தாக அழிப்பது என்று வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, 1940களில் நாஜிகள் யூத மக்கள் தொகையை அழிக்க எடுத்த முயற்சிகளை குறிப்படலாம்.

இதில் நகைமுரண் என்னவென்றால், எந்த மக்கள் கூட்டம் இனப்படுகொலைக்கு உள்ளாகினார்களோ, அந்த மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளே இனப்படுகொலையை நடத்துகிறார்கள் என்பதுதன்.

சரி. விஷயத்திற்கு வருவோம், இனப்படுகொலை குறித்த இந்த எளிய வரையறைக்கு பின்னால், இந்த சொல்லை எப்போது, எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சட்ட ரீதியான குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன

காசா மக்கள்
காசா மக்கள்

வரையறையும் விவாதமும்

இனப்படுகொலை என்ற சொல்லை 1943ஆம் ஆண்டு யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கின் உருவாக்கினார். “Genos” (ஜாதி அல்லது குலம்) என்ற கிரேக்கச் சொல்லையும், “cide” (கொலை செய்ய) என்ற லத்தீன் சொல்லையும் இணைத்து இந்த வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோலோகாஸ்ட் காலத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களில் அவரது சகோதரர் ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும்  கொல்லப்பட்டதைக் கண்ட பிறகு, இனப்படுகொலைக்கு எதிராக போராடினார் லெம்கிம்.

அவர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக, 1948 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் இனப்படுகொலை (UN Genocide Convention) என்ற பதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

இந்த மாநாட்டு அறிக்கை இனப்படுகொலை என்ற சொல்லை இவ்வாறு வரையறுக்கிறது: “ஒரு தேசிய, இன, ஜாதி அல்லது மதக் குழுவினரை மொத்தமாக அல்லது பகுதி அளவில் அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் இனப்படுகொலை ஆகும்.”

இதில் அடங்கும் செயல்கள்:

  • குழுவினரைக் கொலை செய்தல்

  • குழுவினருக்கு கடுமையாக உடலில் காயம் ஏற்படுத்தல்

  • ஒரு குழுவை அழிக்கும் விதமாக வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஏற்படுத்துதல்

  • ஒரு குழுவின் இனப்பெருக்கத்தை அதாவது குழந்தை பிறப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

இந்த ஒப்பந்தத்தில், கையெழுத்திட்ட நாடுகளுக்கு இனப்படுகொலையை தடுக்கும் மற்றும் குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்புகளையும் வழங்குகிறது.

சிக்கல்கள்

இந்த ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சிலர் இந்த வரையறை மிக குறுகியதாக உள்ளது எனக் கூறுகின்றனர். சிலர் இந்த சொல்லை அதிகம் பயன்படுத்துவதால் மதிப்பு குறைந்துவிட்டது எனக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் சிலர், இந்த வரையறையானது, மனிதர்களுக்கு நேரடியாக எதிராக இருக்கும் செயல்களை மட்டுமே கொண்டுள்ளது. சூழல் மற்றும் கலாச்சார தனித்துவம பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்.
இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், இனப்படுகொலை என்ற வரையறை மற்ற குற்றங்களில் இருந்து மிகத் தெளிவாக வேறுப்படுகிறது என்கிறார் முன்னாள் Medecins Sans Frontieres (MSF) பொதுச் செயலாளர் அலைன்  

அவர், “ இனப்படுகொலை மற்ற குற்றங்களிலிருந்து வேறுபடுவது அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தில்தான். ஒரு குழுவை முற்றும் முழுவதுமாக அழிக்கும் விருப்பத்தை இக்குற்றம் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்.

இஸ்ரேல் அரசியல்வாதிகள் அல்லது அதன் அமைப்பில் உச்சத்தில் இருப்பவர்களின் வாதங்களை நாம் ஆராய்ந்தால் காசாவில் நடந்துகொண்டிருப்பது இனப்படுகொலை என்பது விளங்கும்.

ஒருவர் காசா நிலப்பரப்பை வெறும் ரியல் எஸ்டேட்டாக பார்க்கிறார். அங்குள்ள மக்களை அந்த நிலபரப்பில் இருந்து விரட்ட வேண்டும் என்கிறார் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. அவர்களுக்கு எந்த இரக்கமும் காட்டாதீர்கள் என்கிறார் மற்றொருவர்.

இந்த பட்டியல் கவலையூட்டும் அளவில் நீள்கிறது. இதனை முழுமையாக இந்த தளத்தில் காணலாம்.

ரூவாண்டா, ஈராக், மியான்மர் மற்றும் சீனா 

2010 ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என விமர்சிக்கின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் கிறிஸ்தவ, யாசிடி மற்றும் ஷியா சிறுபான்மையினரை ISIS அமைப்பு இனப்படுகொலை செய்ததாக 2016ல் குற்றம்சாட்டியது அமெரிக்கா,

2017ஆம் ஆண்டு, ரோஹிங்யா மக்களை மியான்மர் அரசு இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளித்தது காம்பியா.

2021 ஆம் ஆண்டு சீனாவின் உய்கர் இன மக்களை சீன அரசு இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டின அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து. 

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்

இன்னும் சில இனப்படுகொலைகள்  

  • ஓட்டோமானியர்க்கள் ஆர்மேனியர்களை கொன்றது (1915-1920)

  • ஹோலோகாஸ்ட் – ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.

  • ருவாண்டா – 1994ல் சுமார் 8 லட்சம் டுட்சிகள் கொல்லப்பட்டனர்

ரூவாண்டா, உய்கர், ஆர்மேனியா, ரூவாண்டா, ரோஹிங்யா என வரலாற்றில் வெறும் எண்கள் ஆகிப் போன மக்களின் பட்டியலில் இப்போது காசா பாலஸ்தீனியர்களும் இணைந்து இருக்கிறார்கள்.

யூதர்களின் முக்கிய புனித நூலான தோராவில் யாத்திராகமம் (Exodus) 23:9 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “புலம்பெயர்ந்தவரை ஒடுக்காதீர்கள்; நீங்கள் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தபோது அது எப்படியென்று நீங்களே அறிந்து இருந்தீர்கள் .”  என்று.

ஹூம்… ஆனால், காசாவை பொறுத்தவரை அது பாலாஸ்தீனியர்களின் தாயக நிலம். 629 கிலோமீட்டர் தூரத்தை 45 ஆண்டுகளாக எகிப்தில் இருந்து நடந்தே வந்து இந்த ‘வாக்களிக்கப்பட்ட’  நிலத்தை அடைந்த இஸ்ரேவேலர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அந்த உரிமை பாலஸ்தீனயர்களுக்கும் உள்ளது.

(முற்றும்)

காசா – இஸ்ரேல் மோதல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் என்ன கூறியுள்ளது?

2021ல் அமைக்கப்பட்ட சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு, காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை (Genocide) நடத்தி வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

2. “இனப்படுகொலை” என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட இனத்தை, மதத்தை அல்லது ஜாதியை முற்றிலும் அல்லது பகுதியாக அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் தான் இனப்படுகொலை.
இதில் அடங்குபவை:

  • குழுவினரை கொல்லுதல்

  • கடுமையான உடல்/மன வேதனை ஏற்படுத்துதல்

  • வாழ்வாதாரத்தை அழித்தல்

  • பிறப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள்

  • குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்தல்

3. யார் முதலில் இந்த சொல்லை உருவாக்கினார்?

1943ல் யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கின் “Genos” (இனம்) + “Cide” (கொலை) என்பதைக் கூட்டிப் பயன்படுத்தி உருவாக்கினார்.

4. ஏன் இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு வந்துள்ளது?

அறிக்கையின்படி, இஸ்ரேல் அதிகாரிகள்:

  • உதவி பொருட்கள், மருத்துவ வசதிகளைத் தடை செய்துள்ளனர்

  • பாலஸ்தீனிய பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்

  • தலைவர்கள் பொதுவாக “பாலஸ்தீனியர்களை அழிக்க வேண்டும்” என ஊக்குவிக்கும் பேச்சுகளை நடத்தியுள்ளனர்.

5. இஸ்ரேல் இதற்கு என்ன பதில் கூறியுள்ளது?

 “எங்கள் இராணுவம் பொதுமக்களுக்கு சேதம் வராமல் தவிர்க்க முயன்றது. இந்த அறிக்கை ஹமாசின் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது” என்று மறுத்துள்ளது.

6. இனப்படுகொலை குறித்த சட்ட ரீதியான சிக்கல்கள் என்ன?

  • அரசியல்/சமூகக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல்கள் வரையறையில் இல்லை

  • சூழல் மற்றும் கலாச்சார அழிப்பு சேர்க்கப்படவில்லை

  • “முழுமையாக” அல்லது “பகுதி அளவு” என்ற வரம்பை நிர்ணயிப்பது கடினம்

  • நிரூபிக்க வேண்டிய “உறுதியான நோக்கம்” (Intent) சிக்கலானது

7. வரலாற்றில் நடந்த முக்கிய இனப்படுகொலைகள் என்ன?

  • ஆர்மேனியர்கள் – ஓட்டோமானியர்கள் (1915–1920)

  • ஹோலோகாஸ்ட் – நாசிகள் யூதர்களை அழித்தது (60 லட்சம் பேர்)

  • ருவாண்டா – 1994ல் சுமார் 8 லட்சம் டுட்சிகள் கொல்லப்பட்டனர்

  • ரோஹிங்யாக்கள் – மியான்மர் (2017)

  • உய்கர்கள் – சீனாவில் (2021 )

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest