2_1_02052_pti05_02_2025_000071b

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் உள்பட 21 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப். 18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.18) முதல் செப். 23-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

21 மாவட்டங்களில்… : நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப்.18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப். 19-இல் திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் 180 மிமீ மழை: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 180 மி.மீ. மழை பதிவானது. மணலி புதுநகரம் (சென்னை) – 130 மி.மீ., குருவாடி (அரியலூா்) – 100 மீ.மீ., எண்ணூா் (திருவள்ளூா்), கொரட்டூா் (சென்னை), பாரிமுனை (சென்னை) – தலா 90 மி.மீ., திருவிடைமருதூா் (தஞ்சாவூா்), கத்திவாக்கம் (சென்னை) – தலா 80 மி.மீ. பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செப். 18 முதல் செப். 20-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest