
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அடுத்த 3 மணிநேரத்துக்கு கோவை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், அரியலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!