
பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கிஸா கவானி பசாருக்கு அருகில் அமைந்துள்ள திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமான பூர்விக வீடுகளை, பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே தேசிய பாரம்பரியத் தலங்களாக அறிவித்துள்ள நிலையில், அதனை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண அரசு ரூ. 3.38 கோடி ஒப்புதல் அளித்தது.
இரு கட்டடங்களையும்ம் இரு நடிகர்களின் வாழ்க்கை மற்றும் திரையுலகுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகங்களாக மாற்ற கைபர் பக்துன்க்வா தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.