1378137

காசா: இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்​குள் புகுந்து தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டனர். மேலும், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது.

இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் அதிரடி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்​கும் அதி​க​மான பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்​நிலை​யில் காசா​வில் போரை நிறுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்டு உள்​ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest