1369558

வாஷிங்டன்: ரஷ்யா – உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீடித்து வரு​கிறது. அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி​யில் பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடு​கள் இடையே போரை நிறுத்த சமரச முயற்​சிகளை தொடங்​கி​னார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெற​வில்​லை.

இந்​நிலை​யில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும். புதின் மீது நான் மிக​வும் அதிருப்​தி​யில் இருக்​கிறேன். தான் சொல்​லும் விஷ​யங்​களை செய்​யக்​கூடிய நபராக அவரை நான் நினைக்​க​வில்​லை. அவர் மிக​வும் அழகாக பேசு​வார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest