
தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
ஹைதராபாத் பயணத்தின்போது பாபா சாஹேப் பி.ஆர். அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை. இந்திய அரசியல் சாசனம் ஆகிய தலைப்புகளைக் கொண்ட அஞ்சல் உறைகளையும் படங்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் அட்டைகளையும் அவர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து தீவிர தொற்று பரவல் காரணமாக, நீதிபதி கவாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்லவகையில் ஒத்துழைப்பதாகவும் ஓரிரு நாளில் முழு நலம் பெற்று அவர் பணிக்குத் திரும்புவார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.