kn-nehru

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் “அம்மா” என பெயர் வைத்தார்கள். தற்போது நாங்கள் வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பெயரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடுத்து உள்ளார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அது குறித்து நான் பேச விரும்பவில்லை.

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தற்போது ஓ.பி.எஸ்ஸும் வெளியேறி உள்ளார்.

எங்கள் கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேற வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஆனால் எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது. பல்வேறு விவகாரங்களில் இருந்து தப்பிப்பதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Minister KN Nehru has said that no party will leave our alliance.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest