
மும்பை: எச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 காலாண்டு முடிவில் 1.31 சதவிகிதமாக சரிந்து ரூ.16,258 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியானது ரூ.16,475 கோடி நிகர லாபம் ஈட்டியது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி அதன் முதல் காலாண்டில் ரூ.18,155 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.16,174 கோடியாக இருந்தது.
ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.99,200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே அதன் முந்தைய ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.83,701 கோடியாக இருந்தது.
மொத்த செலவுகள் ரூ.63,467 கோடியாகவும், இதுவே அதன் முந்தைய நிதியாண்டில் அதே காலத்தில் இது ரூ.59,817 கோடியாக இருந்தது. நிகர வட்டி வரம்பு முந்தைய காலாண்டில் 3.46 சதவிகிதத்திலிருந்து 3.35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளில் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.2,602 கோடியிலிருந்து ரூ.14,442 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி செயல்பாடற்ற சொத்துக்கள் விகிதம் மூன்று மாதங்களுக்கு முன்பு 1.33 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!