Gw4UNIBaUAAMZmo

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடையே நடந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றிருந்தது. நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

ENG VS IND
ENG VS IND

ஆனால், இந்தப் போட்டி நான்காவது நாள் வரைக்குமே இங்கிலாந்தின் கையில்தான் இருந்தது. ஆனால், இந்திய பேட்டர்கள் இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ஐந்தாவது நாள் கடைசி வரை போட்டியை இழுத்து டிரா செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, நாள் முடிவடைய இன்னும் 14 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியைக் கைக்குலுக்கி டிரா செய்து முடித்துக்கொள்ளலாம் என்று கேட்டார். ஆனால், அப்போது ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதத்தை நெருங்கி இருந்தனர். இதனால், போட்டியை டிரா செய்ய ஜடேஜா மறுத்துவிட்டார்.

இந்த சமயத்தில் இருவரும் பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. `நீங்கள் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் முன்கூட்டியே அதற்கு ஏற்றமாதிரி பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

பென் ஸ்டாக்ஸ்

ஹாரி ப்ரூக்குக்கும் டக்கெட்டுக்கும் எதிராகவா நீங்கள் சதத்தை அடித்து நிரூபிக்க வேண்டும்’ என்று பென் ஸ்டாக்ஸ் கேட்க, ‘என்னைய என்ன பண்ண சொல்றீங்க. வேண்டுமானால் நீங்கள் போட்டியை விட்டு வெளியேறுங்கள். என்னால இப்ப எதுவும் பண்ண முடியாது’ என்று ஜடேஜா கூறி கைக்குலுக்க மறுத்துவிட்டார். இது இங்கிலாந்து வீரர்களை கடுப்பாக்கியது.

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இருவரும் சதத்தை கடந்தவுடன் இந்திய கேப்டன் கில் டிராவுக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோக்ஸின் செயல்பாடுக்கு எதிராக, இந்திய பயிற்சியாளர் கம்பீர், முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் நாசர் உசேன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest