page

நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னதானச் சேவையைத் தொடங்கியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் திரைத்துறை நடிப்பைத் தாண்டி வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கண்மணி அன்னதான விருந்து என்கிற புதிய அன்னதான சேவையைத் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய லாரன்ஸ், “என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான ‘கண்மணி அன்னதான விருந்து’ இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்த பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும்.

இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது.

உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் லாரன்ஸின் புதிய முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

actor lawrence started new free food service named as kanmani annathana virundhu.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest