
நடிகை ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் காந்தாரா சேப்டர் 1 படத்தின் டப்பிங் பணிகளை முடித்ததாகக் கூறியுள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் 2022-இல் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற கதையை மையமாக வைத்து காந்தாரா சேப்டர் 1 படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளார். ஹொம்பாலே ஃபில்ம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 7 இந்திய மொழிகளில் அக்.2ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அவர் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.