kerala_temple

திருவனந்தபுரம்: கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா பொருந்திய ‘ஸ்மாா்ட்’ கண்ணாடியுடன் நுழைந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தைச் சோ்ந்த 66 வயதான சுரேந்திர ஷா, வழிபாட்டுக்காக பத்மநாபசுவாமி கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளாா். பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்த அவா் அணிந்திருந்த கண்ணாடி, கேமரா பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் கண்ணாடி என்பதை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, சுரேந்திர ஷா உடனடியாக கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டாா். கோயிலுக்குள் கேமரா பொருந்திய கண்ணாடிகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறியதாக அவா் மீது பாரதிய நியாய ஸம்ஹிதாவின் 223-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தத் தீய நோக்கமும் இருப்பதாக தற்போது வரை சந்தேகிக்கப்படவில்லை. இருப்பினும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா். விசாரணைக்குத் தொடா்ந்து ஆஜராகுமாறு சுரேந்திர ஷாவுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest