
கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் வாகனங்களைப் பார்ப்பதில் பெருமைப்படுகிறேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அந்த நாடுகளின் மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் துறையினரைச் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வாகனத்துடன் நிற்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ”இந்திய நிறுவனங்கள் புதுமையால் வெற்றி பெற முடியும் என்பதைக் காட்டுகிறது, நண்பர்கள் மூலம் அல்ல” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கொலம்பியாவில் உள்ள என்விகாடோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடைபெறுவதாக விமர்சித்திருந்தார்.
வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிப்பதாக ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Proud to see Indian vehicles in Colombia – Rahul Gandhi