
சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார்.
ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பிகாரில் ‘வாக்குரிமைப் பேரணியை’ ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என மக்களுக்குக்கூட பொதுவெளியில் தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த குழப்பத்துக்கு தீர்வு காணவில்லை.
கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் சாதனைகளை வைத்து அரசியல் ஆதாயம் ஈட்ட அவர்கள்(பாஜக) விரும்புகிறார்கள்” என்றார்.