சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.
பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கிக் கொள்வார். இவரது நண்பர் நாலுகால்பட்டி பகுதியை சேர்ந்த உதயசரண், இவர் தனியார் மருத்துவமனையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 7ம் தேதி நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும் உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கி இருந்த அறையில் உதயசரண் வந்து தங்கி உள்ளார்.
அப்போது பாரதி மயங்கி நிலையில், உதயசரண் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் திரண்டனர். அப்போது அவர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாரதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மூக்கில் ரத்தக் காயமும், நெஞ்சுப் பகுதியில் வீக்கமும் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் பலமாக தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
அதே நேரத்தில் உதயசரணிடம் நடத்திய விசாரணையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர்.
இதற்கிடையில் பாரதிக்கும் உதயசரணுக்கும் இடையில் நெருகிய உறவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததால், பாரதியை அடித்து தலையணையால் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, உதயசரணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.