
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிகாரில் தொடர்ச்சியாகப் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, ஜூலை 9ல் ராகுல் காந்தி பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காந்தி, தலைநகரில் நடைபெறும் புதிய தொழிலாளர் சட்டம் மற்றும் வாக்காளர் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த தகவலைச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், பிகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தனர்.
ஒரு மாதத்திற்குள் நிறைவடையும், வாக்காளர் திருத்தப் பட்டியல், இதுவரை குழப்பத்தில் உள்ளதாகவும், இந்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தேர்தல் ஆணையம் உதவ முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.