
கடைசி போட்டியில் தோற்றும் டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகி இத்தாலி அணி வரலாறு படைத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கால்பந்தில் மிகப்பெரிய செல்வாக்கினை செலுத்துகிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் பின்தங்கியே இருந்தது.
தற்போது, கிரிக்கெட்டிலும் இத்தாலி கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-இல் 20 அணிகள் விளையாட இருக்கின்றன.
கடைசி போட்டியில் தோற்றும் தேர்வான அதிசயம்…
ஐரோப்பிய தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துடனான கடைசி போட்டியில் இத்தாலி விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த 134/7 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து 16.2 ஓவரில் 135/1 ரன்கள் எடுத்து வென்றது.
மற்றுமொரு போட்டியில் ஸ்காட்லாந்தை ஜெர்ஸி அணி கடைசி பந்தில் வென்றதால் ரன் ரேட் அடிப்படையில் இத்தாலிக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஐரோப்பியாவில் இருந்து நெதர்லாந்து, இத்தாலி அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.
ஐரோப்பிய டி20 தகுதிச் சுற்றின் புள்ளிப் பட்டியல்
-
நெதர்லாந்து – 6 புள்ளிகள் (+1.281)
-
இத்தாலி – 5 புள்ளிகள் (+1.612)
-
ஜெர்ஸி – 5 புள்ளிகள் (+0.306)
-
ஸ்காட்லாந்து – 3 புள்ளிகள் (-0.117)
-
குயெர்ன்சி – 1 புள்ளி (-2.517)
புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.
மொத்தம் 20 அணிகளில் இதுவரை 15 அணிகள் தேர்வாகியுள்ளன.