
முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 33.9 சதவீதம் உயா்ந்து ரூ.1,140.6 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.851.5 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2.65 சதவீதம் உயா்ந்து ரூ.13,351.2 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.13,005.5 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.