one

ஒன்பிளஸ் நார்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நார்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, இன்று (ஜூலை 8) 2 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. நாளை (ஜூலை 9) முதல் இந்த ஸ்மார்ட்போன்களை கடைகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் நார்டு 5 மற்றும் நார்டு சிஇ 5 ஆகிய மத்திய தர இரு ஸ்மார்ட்போன்கள் தரமான கேமரா, சக்திவாய்ந்த 8-ஆம் தலைமுறை ஸ்நாப்டிராகன் புராசஸ்ர் உடன் அறிமுகமாகியுள்ளன.

நார்டு 5 சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நார்டு 5 ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

6,650mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

6.83 அங்குல அமோல்ட் திரையைக் கொண்டது. 50MP பின்புற, முன்பக்க கேமரா வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திரையின் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 144Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும்போது வெப்பம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், வெப்பத் தணிப்பான்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நோர்டு 5 ஸ்மார்ட்போனில் கூடுதலாக, கேம் பிரியர்களைக் கவரும் வகையில், சிபியு மற்றும் உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.

நார்டு 5 சிஇ சிறப்பம்சங்கள்

நார்டு 5 சிஇ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

7,100mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

6.77 அங்குல அமோல்ட் திரையைக் கொண்டது. 50MP பின்புற, முன்பக்க கேமரா வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திரையின் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும்போது வெப்பம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், வெப்பத் தணிப்பான்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

விலை விவரங்கள்

ஒன்பிளஸ் நார்டு 5

8GB + 128 GB – ரூ. 31,999

12GB + 256 GB – ரூ. 34,999

12GB+512GB – ரூ. 37,999

ஒன்பிளஸ் நார்டு சிஇ 5

8GB + 128 GB – ரூ. 24,999

12GB + 256 GB – ரூ. 26,999

12GB+512GB – ரூ. 28,999.

கிரிடிட் கார்டு அட்டைகளைப் பயன்படுத்தினால் ரூ. 2,000 வரைக்கும் தள்ளுபடி கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Two smartphones have been launched, the OnePlus Nord 5 and the OnePlus Nord CE 5.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest