
பாங்காக்/நாம்பென்: தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது. இந்து மதத்தைப் பின்பற்றிய ரத்தனகோசின், கெமர் பேரரசுகள் தங்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்களை கட்டின. தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை எழுந்து போராக வெடித்திருக்கிறது.