
திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், நம்முடைய பைகள் நிரம்பப் போகிறது. ஜிஎஸ்டி மறு சீரமைப்புக்கு வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் அங்கீகாரம் போய்விட்டது. மக்கள் நீதி மையம், கொங்கு கட்சி, ஜவஹிருல்லா கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. எங்களைப் பார்த்து பயப்படுவதாக சொன்னார்கள், இன்று அவர்கள் கூட்டணி போய்விடும் போல் உள்ளது.
காங்கிரஸ் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று சொல்கிறார்கள். திருமாவளவன் ஏற்கெனவே சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுகள், உழைப்பாளர்கள் என்று சொல்லிவிட்டு தற்போது பெட்டி பாம்பாய் அடங்கி விட்டார்கள். தேர்தல் வர வர தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும். இந்தியா கூட்டணி உதிரும். விஜய் இரண்டு, மூன்று நாள்களாக பெரிய கூட்டத்தை கூட்டுகிறார். அவரிடம் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி தருபவர் சரி பார்த்து எழுதிக் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி
திடீரென்று அரசியலுக்கு வந்தவுடன் என்னவென்று புரியாமல் உள்ளார். வருபவர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள், வாக்களிக்க வரவில்லை. ஒரு விஷயத்தில் நான் விஜயுடன் உடன்படுகிறேன் முதல்வர் வெளிநாட்டுக்கு முதலீடு ஈர்க்க செல்கிறாரா, முதலீடு செய்ய செல்கிறாரா என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். திமுக நிச்சயம் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டியில் மக்கள் பலன் பெறப்போகிறார்கள்.
ஆனால் கலர், கலராக சட்டை போட்டுக் கொண்டு ஷூட்டிங் நடத்துகிறார்கள். ஒரே வித்தியாசம் என்னவென்றால் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.