tirupati_temple-_PTI

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையில் 82,042 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரமும் மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (செப். 20) ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 82,042 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் 6 முதல் 8 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதுமட்டுமின்றி, நேற்று ஒரே நாளில் ரூ. 4.59 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

Thirumala Tirupati Oneday Hundi Collection

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest