Mubmabi_-_Rains_-13

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு முதல் நாட்டின் தலைநகரில் பலத்த மழை பெய்தது, இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தில்லி-என்சிஆர்-இன் பெரும்பாலான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை நீடித்தது.

இந்த நிலையில், வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய தில்லி என பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest