ANI_20250911065122

புது தில்லி: வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார்.

வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தகுந்த ஆதாரங்களை தான் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

மத்திய பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான வெள்ளை மற்றும் கருப்பு ஆதாரங்களை நாங்கள் அளித்திருக்கிறோம். நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த் மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிடுவோம், வாக்குத் திருட்டு என்ற புகார், உண்மை என்பதால்தான் காட்டுத் தீ போல பரவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குகளைத் திருடித்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்திருக்கிறது என்பது உண்மை. பாஜக தலைவர்கள், இதற்கு எதிரானப் போராட்டத்தை நிறுத்த வேண்டும், ஏனென்றால் ஹைட்ரஜன் குண்டு, அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடும் என்று கூறினார்.

கடந்த மாதம், பிகாரின் முஸாபர்பூர் நகரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ஆறு மாதங்களில் சந்தேகத்துக்கு இடமின்றி, ஆளும் பாஜக தேர்தல்களைத் திருடுகிறது என்பதை நிரூபித்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் ராகுல் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அனைத்து வாக்குத் திருட்டுகளும் குஜராத் மாடலில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு பிகாரில் முடிவு கட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest