narendra-modi-in-parliament-ed

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

நாட்டில் கடந்த 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015-இல் அறிவித்தது. அதன்படி, 11-ஆவது தேசிய கைத்தறி தினம் வியாழக்கிழமை (ஆக.7) கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்தியில் எனது தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கைத்தறி துறை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் கண்டுள்ளது. அனைவருக்கும் தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள். நமது மக்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வளமான நெசவு பாரம்பரியத்தை கொண்டாடும் நாள் இதுவாகும். நாட்டின் நெசவு பன்முகத்தன்மை, நெசவாளா்களின் வாழ்வாதாரம்-வளத்தை மேம்படுத்த பங்காற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

நாட்டில் 2,600-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளின் வாயிலாக 43 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் மற்றும் இணைப் பணியாளா்களுக்கு சந்தை அணுகல் கிடைக்கப் பெற்றுள்ளது. 1,700 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து 20-க்கும் மேலான நாடுகளுக்கு ரூ.21,000 கோடிக்கும் அதிகமான கைத்தறி பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest