annamalai1

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து விட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

அவற்றின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.

கல்விக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை இனியாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழகப் பள்ளி மாணவர்கள் கல்வியில் விளையாடுவதை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கை தனித்துவமானது! முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும்.

இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Former BJP leader Annamalai has said that the DMK government has only now realized the importance of the National Education Policy.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest