httpswww_google_comsearchq_______________tbm_isch_ved_2ahUKEwj3xZS10_z9AhXt63MBHT_UAoMQ2_cCegQIABAC_

பார்த்து பார்த்து நிலம் அல்லது வீடு வாங்கிவிட்டு, அதை பதிவு செய்யும்போது, ஒரு சில தவறுகளைச் செய்துவிடுகிறோம்.

இது பின்னாளில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், இவற்றை பத்திரப்பதிவின் போதே, சரிசெய்வது மிக மிக அவசியம்.

சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி

பொதுவாக, பத்திரப்பதிவின் போது செய்யப்படும் தவறுகள் என்னென்ன என்பதை நமக்கு பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.

1. நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் பெயர், பான் எண், ஆதார் எண், முகவரி, வயது, கைபேசி எண் போன்ற விவரங்கள்,

2. விற்பனை ஆவண தேதி,

3. நிலத்தின் சரியான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்,

4. நிலத்தின் சரிபார்த்த அட்டவணை விவரம் மற்றும் விளக்கம்,

5. நிலத்தின் சரியான நான்கு எல்லை விவரம், நேரியல் அளவீடு, சொத்தின் அளவு மற்றும் பரப்பளவு,

6. நிலத்தின் அன்றைய விற்பனை மற்றும் சந்தை மதிப்பு,

7. விற்பனை செய்யப்படும் நிலத்தின் விற்பனை மதிப்பின் பண பரிவர்த்தனை செய்யப்படும் டிமாண்ட் டிராஃப்ட், காசோலை அல்லது RTGS விவரங்கள்,

8. நிலம் சம்பந்தபட்ட சரியான பட்டா, புல அளவீடு வரைபடம் மற்றும் தளவமைப்பு நகல்,

9. முந்தைய ஆவணங்கள் எண் மற்றும் அது சார்ந்த விற்பனையாளர் விவரங்கள்,

10. சொத்தின் பரிமாணங்கள் மற்றும் தோற்ற விகிதம்,

11. நிலத்தின்/வீட்டின் கதவு எண், தெரு பெயர், கிராமத்தின் பெயர், மாவட்ட பெயர் விவரங்கள்

12. நிலம் அமைந்துள்ள இடத்தின் அதிகார வரம்பில் உள்ள சார் பதிவாளர் அலுவலக விவரம்,

13. நிலம் விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகளின் சரியான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கையெழுத்து.

பத்திரப்பதிவு...
பத்திரப்பதிவு…

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, இதெல்லாம் தவறுகளா, இதில் கூடவா தவறுகள் ஏற்படும் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

ஆம், இதில் தான் அதிக தவறுகள் ஏற்படுகின்றன. பார்க்க இவை சின்ன தவறுகள் போல தெரியலாம். ஆனால், பின்னாளில், குறிப்பிட்ட நிலத்தில் வீடு கட்டும்போதோ, அதன் மீது கடன் எடுக்கும்போதோ அல்லது அந்த நிலத்தை விற்கும்போதோ, சிக்கல் ஏற்படலாம்.

அதனால், இவற்றில் நிச்சயம் கவனம் தேவை”.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest