anbumani

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்.

அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதையடுத்து ராமதாஸ் தரப்பு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Anbumani said about the general committee’s verdict.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest