prajwal

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார்.

வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இன்று காலை, நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜரானார். தண்டனை விவரங்கள் தொடர்பான விவாதத்தின்போது, குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு பிரஜ்வல் சப்தமாகக் கதறி அழுதார்.

வாதங்கள் நிறைவடைந்து, தண்டனை விவரம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு வழங்கப்படவிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜனனா பட் தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியிடப்படவிருக்கிறது.

பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 14 மாதங்களில், நீதிமன்றத்தில் விசாரணைத் தொடங்கி 8 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, கண்ணீர் விட்டு அழுதார் பிரஜ்வல் ரேவண்ணா. இன்று வாதம் நடைபெற்ற போது, வாய்விட்டுக் கதறி அழுதார், பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்ச தண்டனை கேட்டு.

நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நீதிமன்றத்துக்கு வரவில்லை என்பதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest