arrest

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் ஆவாா்.

நேபாளத்தில் பல்வேறு சிறைகளில் 15,000-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். அண்மையில் அங்கு நடைபெற்ற இளைஞா்கள் போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதனைப் பயன்படுத்தி சிறையில் இருந்தும் பலா் தப்பினா். இவா்களில் சிலா் எல்லைதாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனா்.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தது. அதன்படி பிகாா் காவல் துறையினருக்கு நேபாள சிறையில் இருந்த தப்பியோா் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.

அப்போது மோதிஹாரி பகுதியில் பதுங்கியிருந்த 5 வெளிநாட்டவா் கைது செய்யப்பட்டனா். வன்முறையைப் பயன்படுத்தி நேபாள மத்திய சிறையில் இருந்த தப்பி இந்தியாவுக்குள் நுழைந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அவா்கள் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனா். மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest