PTI09152025000215B

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபுக்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பான கடிதத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

தொடக்க நிவாரணமாக ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவித்திருப்பது பஞ்சாப் மக்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும். வெள்ளத்தால் ரூ.20,000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் துணிவாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று, ஒருங்கிணைந்த நிவாரண உதவியை அளிக்க வேண்டும்.

4 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா் சேதமடைந்துவிட்டது. 10 லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் தங்கள் வீடுகளை இழந்துவிட்டனா் என்று ராகுல் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளாா்.

பஞ்சாபில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அமிருதசரஸ், குருதாஸ்பூா் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest