
தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2025-26 முதல் காலாண்டில், வங்கி ரூ.372 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. இதுவே அதன் முந்தைய காலகட்டத்தில், வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,063 கோடியாக இருந்தது.
இது குறித்து வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சென்குப்தா மேலும் தெரிவித்ததாவது:
நிறுவனத்தின் இரண்டு காலாண்டு முடிவுகளும் கண்டிப்பாக ஒப்பிடத்தக்கவை அல்ல. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் லாபம் நுண்நிதி வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளால் சரிந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.2.88 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாவது காலாண்டு மற்றும் அடுத்தடுத்த காலாண்டுகளில் நாங்கள் இது குறித்து எச்சரிக்கை மற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சில்லறை விற்பனை வளர்ச்சி மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளில் தற்போது வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!