PTI09202025000392B

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் குறைந்த பந்துகளில் சதமடித்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில், இதற்கு முன் இந்திய வீரர் விராட் கோலி 52 பந்துகளில் சதமடித்ததே இந்தியர் ஒருவரின் அதிவேக சதமாக இருந்தது…

ஆனால், ஸ்மிருதி 50 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார்…

22-வது ஓவரில் ஸ்மிருதி ஆட்டமிழக்கும் வரை, ஓவருக்கு சராசரியாக ரன் ரேட் 10-க்கும் கீழ் குறையாமல் பார்த்துக்கொண்டார்…

ஆஸி. நிர்ணயித்த 413 என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்தியா கடைசியில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!

இந்தியா தோல்வியை தழுவியபோதும் எதிரணியினரும் ஸ்மிருதி மந்தனாவை வெகுவாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்…

அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய ஸ்மிருதி, ஒட்டுமொத்த அணிக்கும் பாராட்டை உரித்தாக்கினார். “எங்கள் அணியில் ஒவ்வொருவருமே மேட்ச்-வின்னர்தான். அணியிலுள்ள 11 பேரை மட்டும் குறிப்பிட்டு நான் இதைச் சொல்லவில்லை.15 பேர் கொண்ட மொத்த அணியையும் உள்ளடக்கிச் சொல்கிறேன்”

“ஆட்டத்தின் எந்தவொரு தருணத்திலும் எங்களால் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை நம் அணி மீது எனக்கு இருக்கிறது. நம் அணியில் எந்தவொரு வீராங்கனையும் ஆட்டத்தை வென்று காட்டுவார்… பிரதீகா, ஹர்லீன், ஹர்மன், ஜெமியா ஆகியோரும் சதமடித்துள்ளனர்”

“தனிப்பட்ட வீராங்கனையின் சாதுரியத்தைவிட, ஒரு அணியாக ஒருங்கிணைந்து பீல்டிங்கில் எப்படிச் செயல்படுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள், படங்களுக்கு…
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest