
புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது.” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிங், “அதிகளவு வரிகளை விதிப்பது யாருக்கும் பலனளிக்காது” என்று கூறினார்