03082-pti08032025000208a094517

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை காலை அவசர எண் 112-ஐ தொடா்புகொண்டு அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு மா்ம நபா் ஒருவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா்.

இதுதொடா்பான விசாரணையை தீவிரப்படுத்தியபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் கைப்பேசி எண்ணைக் கொண்டு அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது.

பின்னா் அந்த நபா் நாகபுரி நகரில் உள்ள சக்கா்தாரா பகுதியைச் சோ்ந்த உமேஷ் விஷ்ணு ரௌத் என்பது தெரியவந்ததையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த நபரை குற்றத் தடுப்பு பிரிவு கைது செய்தது.

இச்செயலில் உமேஷ் விஷ்ணு ராவத் ஈடுபட்டதற்கான உள்நோக்கத்தைக் கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest