vadam

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று(ஆக. 4) நடைபெற்றது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் மற்றும் நடிகை சங்கீதா ஆகியோர் வருகை புரிந்து கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து 18 வகையான மூலிகை அபிஷேகங்களை செய்தனர். பின்னர், சிறப்பு தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மன் கோயில் அருகே உள்ள தோட்டத்தில் நடிகர் விமலின் புதிய படமான வடம் திரைப்படத்துக்கான பூஜை நடைபெற்றது.

வடம் படத்தை கேந்திரன் எழுதி இயக்குகிறார். வீரசேகர் தயாரிக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் டெக்னீசியன் குழு கலந்து கொண்டனர். தொடர்ந்து, அங்கு வந்த பக்தர்களுக்கு விமல் மற்றும் கதாநாயகி சங்கீதா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

இதையும் படிக்க: ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

Pooja for the new film starring actor Wimal was held today (Aug. 4) at the Anaimalai Masani Amman Temple in Pollachi.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest