
மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களை கற்றல் அடைவுகளை எட்டச் செய்வது, ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது,
”கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது மத்திய அரசு.
சிங்களாந்தபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கட்டட மேற்கூரை பெயர்ந்தது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். கல்வியும் சுகாதாரமும் முதல்வருக்கு இரு கண்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக முரண்பாடு காட்டுவது யார்? மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் அறிவார்கள் எனப் பேசினார்.
இதையும் படிக்க | நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!