
இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:
-
நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப் பிறகு ஹீட்டன் பார்க் ஹீப்ரு சபை ஜெப ஆலயத்திற்கு வெளியே பொதுமக்களை நோக்கி ஒரு கார் ஓட்டிச் செல்லப்பட்டது.
-
பின்னர் ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி மக்களைக் தாக்கத் தொடங்கினார்.

-
இந்த தாக்குதலில் க்ரம்ப்சால் பகுதியைச் சேர்ந்த அட்ரியன் டால்பி (53) மெல்வின் கிராவிட்ஸ் (66) இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் மூன்று பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
-
அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்றனர்.
-
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
-
தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலில், 35 வயதான ஷாமி என்பதும், அவர் சிரியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்றவர்.
-
சுட்டுக்கொல்லப்பட்டவரின் இடுப்பில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்பட்டதை அடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு நிறுத்தப்பட்டது.
-
அந்த சாதனம் செயல்படாதது என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

-
இந்தக் கொடூரச் செயல்களுக்குத் துண்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 60 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
-
தாக்குதலுக்கான நோக்கம், காயமடைந்தவர்களின் அடையாளங்கள், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடையாளங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடவில்லை.